ஒவ்வொரு குரல் பதிவு கொண்ட ட்வீட்டும் 140 வினாடிகள் வரை ஆடியோவைப் பதிவு செய்யும். ஆரம்பக் காலக்கட்டத்தில் ஒரு ட்வீட்டுக்கு 140 என்ற எழுத்து வரம்பைக் கொண்டிருந்தது. பின்னர் அது 280ஆக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஓஎஸ் பயனர்கள் தங்கள் ட்விட்டர் செயலி மூலம் இனி குரல் பதிவிடலாம்! - tech news in tamil
சான் ஃபிரான்சிஸ்கோ: மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் புதன்கிழமையன்று அமெரிக்காவில் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு ஆடியோவை ட்வீட்டாக பதிவுசெய்வதற்கான சோதனையை மேற்கொண்டதாகத் தெரியவந்துள்ளது. எனவே, விரைவில் 140 விநாடிகள் நீளமான ஆடியோ ட்வீட்டை 280 எழுத்துக்களுடன் உரையாகப் பதிவிட முடியும்.
”சில நேரங்களில் 280 எழுத்துக்கள் போதாது. சில உரையாடல் நுணுக்கங்கள் மொழிபெயர்ப்பில் சரியாக மொழிபெயர்க்கப்படாது. எனவே இன்று முதல் ட்விட்டரைப் பயன்படுத்தும் விதத்தில் உங்கள் சொந்தக் குரலை இணைக்கும் ஒரு புதிய அம்சத்தை சோதித்துப் பார்க்கிறோம்” என ட்விட்டர் நிர்வாகம் ட்வீட் செய்துள்ளது.
”ஆடியோ பதிவைக் கேட்க படத்தைக் சொடுக்கவும். ஐஓஎஸ்-இல் மட்டும், உங்கள் டைம்லைனின் கீழ்ப்பகுதியில் புதிய விண்டோவில் பிளேபேக் தொடங்கும். மேலும் நீங்கள் ஸ்க்ரோல் செய்யும போது அந்த ஆடியோ பதிவைக் கேட்கலாம்” என்றும் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. குரல் ட்வீட்டை கேட்பவர்களுக்கும், கதை சொல்பவர்களுக்கும் ஒரு சிறந்த அனுபவத்தை இது உருவாக்கும் என்று ட்விட்டர் நம்புகிறது.