தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நீட் தேர்வு மாணவர்கள் தற்கொலைக்கு திமுகதான் காரணம்: பாஜக மாநிலச் செயலாளர் - Tiruvallur district news

திருவள்ளூர்: நீட் தேர்வு மாணவர்கள் தற்கொலைக்கு முழுக்காரணமும் திமுக தான் என பாஜக மாநிலச் செயலாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

நீட்தேர்வு மாணவர்கள் தற்கொலைக்கு திமுகவை காரணம்
நீட்தேர்வு மாணவர்கள் தற்கொலைக்கு திமுகவை காரணம்

By

Published : Sep 12, 2020, 9:11 PM IST

திருவள்ளூர் மாவட்ட பாஜக செயற்குழுக்கூட்டம் மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநிலச் செயலாளர் ஸ்ரீதரன் கலந்து கொண்டார். அப்போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள், பாஜக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலச் செயலாளர் ஸ்ரீதரன், "1967இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கையிலெடுத்து, திமுக ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் தற்போது மொழிப் பிரச்னையை கையிலெடுத்து திமுக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் இருக்கிறது.

இன்றைய மாணவர்கள் இந்தியை கற்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். அதைத் தடுக்க ஸ்டாலின் யார் என்று கேட்கக்கூடிய நிலையில் இன்று இளைஞர்கள் உள்ளனர்.

மொழி அரசியலை வைத்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவிகூட அமர வாய்ப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும். நீட் தேர்வு மாணவர்கள் தற்கொலைக்கும் முழுக்க முழுக்க திமுக தலைவர் ஸ்டாலின் தான் காரணம்" என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details