மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மராத்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, கூட்டணிக்காக தேசியவாத காங்கிரஸார் எங்களை அணுகினார்கள்.
ஆனால் சிவசேனாவுடன் கூட்டணி உறவை முறித்துக் கொள்ள பாஜக தலைவர்கள் விரும்பவில்லை.
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை.
ஆனால், எதிர்க்கட்சி என்ற முறையில் சிவசேனா அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவோம்.
மாநிலத்தில் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட வேண்டும்” என்றார். பாஜகவின் இயற்கை கூட்டணி என்று வர்ணிக்கப்பட்ட சிவசேனா கடந்தாண்டு (2019) கூட்டணியை முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியோருடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது நினைவு கூரத்தக்கது.