நடிகை நயன்தாராவிற்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கரோனா தொற்று இருப்பதாக நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்திருந்த நிலையில் இந்த செய்தி வதந்திதான் எனத் தெரியவந்தது.
இந்நிலையில் கரோனா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் குழந்தைகளாக மாறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இருவரும் குழந்தைகள் போல் சுட்டித்தனம் செய்து மகிழ்வது போல் தோன்றியுள்ளனர்.
அதில், "எங்களுக்கு கரோனா இருப்பதாக வெளியான செய்திகளை நாங்கள் இப்படித்தான் பார்க்கிறோம். கரோனாவால் நாங்கள் இறந்து விட்டது போல புகைப்படங்களை வடிவமைத்த உங்கள் அனைவரையும் இப்படித்தான் பார்க்கிறோம்.
நாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம். ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். உங்களைப் போன்ற ஜோக்கர்களின் கற்பனையையும் முட்டாள்தனமான ஜோக்குகளையும் பார்க்க, கடவுள் எங்களுக்கு போதுமான வலிமையைக் கொடுத்திருக்கிறார்" என்றும் தன் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதையும் படிங்க :'ரசிகர்களின் அண்ணன், மக்களின் கலைஞன், தன்னைத்தானே செதுக்கிய தமிழ் சினிமாவின் தளபதி'