இந்தி திரைத்துறையில் முன்னணி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தவர் நட்ராஜ் சுப்ரமணியம். இவர், அனுராக் காஷ்யப் இயக்கிய பிளாக் பிரைடே, பாஞ்ச் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இவர் திடீரென்று அனுராக் காஷ்யப்பை சாடி தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், சத்யா படத்தின் கதாசிரியர்களில் அனுராக் காஷ்யப்பும் ஒருவர். அதன் பிறகு அவர் எங்களுடன் சேர்ந்து 'பான்ச்' படத்தை உருவாக்கினார். அதற்காக நான் சம்பளமே வாங்காமல் அவருடன் இருந்தேன். அதுமட்டுமில்லாமல் 'லாஸ்ட் ட்ரெய்ன் டு மஹாகாளி' படத்திலும் சம்பளம் வாங்காமல் அவருக்காக பணியாற்றினேன்.