பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில் இன்று (ஏப்.23) நல்லேறு பூட்டும் நிகழ்வு நடைபெற்றது. நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நல்லேறு பூட்டும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
விவசாயம் செழிக்க நடைபெற்ற நல்லேறு பூட்டும் நிகழ்வு: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! - perambalur district news
பெரம்பலூர் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க நல்லேறு பூட்டும் நிகழ்வு நடைபெற்றது.
![விவசாயம் செழிக்க நடைபெற்ற நல்லேறு பூட்டும் நிகழ்வு: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! nalleru pottuthal festival](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:19:01:1619189341-tn-pbl-02-nalleru-pottudthal-script-image-tn10037-23042021161618-2304f-1619174778-69.jpg)
nalleru pottuthal festival
கலச பூஜையோடு விழா தொடங்கி சிறப்பு பூஜைகள் செய்யபட்டது. அதனைத் தொடர்ந்து மாடுகளுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும், வயலில் ஏர் பூட்டி உழுதனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.