தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

டென்னிஸ்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நடால்! - நடால்

ரோம் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டென்னிஸ்: இறுதிச் சுற்றில் நடால்

By

Published : May 18, 2019, 10:49 PM IST

2019ஆம் ஆண்டுக்கான ரோம் ஓபன் டென்னிஸ் தொடர் இத்தாலியின் தலைநகரான ரோம்-இல் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் நடால், கிரீஸ் நாட்டைச் சேர்ந்த சிட்சிபாஸை எதிர்கொண்டார்.

இதில், நடால் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதே போல் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறதிப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா 5-7, 7-5, 6-2 என்ற கணக்கில் நெதர்லாந்தின் பெர்டீன்ஸை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றார்.

ABOUT THE AUTHOR

...view details