சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்து பொள்ளாச்சி திருவள்ளூர் திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ”சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரைக்ச் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் அடித்துக் கொன்றனர்.
சாத்தான்குளம் சம்பவம்: நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - Naan tamizhar party protest
கோவை: சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொள்ளாச்சியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![சாத்தான்குளம் சம்பவம்: நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் சாத்தான்குளம் சம்பவம் : நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:23:28:1593341608-tn-cbe-05-pollachi-naam-thamilar-arpattam-vis-tn10008-28062020141919-2806f-1593334159-268.jpg)
இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. ஆனால், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் காவல் துறையினர் செயல்படுகிறார்கள். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் பாலியல் வழக்கை மத்தியக் குற்றப் பிரிவுக்கு மாற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சாத்தான்குளத்தில் இரட்டைக் கொலை செய்த காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:போலீஸ் தாக்குதலால் மனமுடைந்து இளைஞர் தற்கொலை: திமுக ரூ.1 லட்சம் நிதியுதவி!