தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி இல்லை - நகராட்சி ஆணையர் அதிரடி - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திற்குள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி இல்லை என நகராட்சி ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Municipality commissioner inspection on mask
Municipality commissioner inspection on mask

By

Published : Jun 17, 2020, 7:44 AM IST

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று நோய் அதிகரித்துவரும் நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களையும், அறிவுரைகளும், தடுக்கும் வழிமுறைகளையும் அறிவித்துவருகிறது.

மேலும், முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், "திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி பேருந்து நிலையத்திற்குள் வரும் பொதுமக்கள், பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், இல்லை என்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

முகக்கவசம் அணியவில்லை என்றால் பேருந்து நிலையத்திற்குள் அனுமதி இல்லை" என நகராட்சி ஆணையர் தேவிகா உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details