இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனிக்கு நடப்பு ஆண்டு சிறந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டில் ஒன்பது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர், நான்கு அரைசதங்கள் என 81.75 பேட்டிங் சராசரியுடன் 327 ரன்களை குவித்துள்ளார். இந்தச் சிறந்த நிலையை அவர் ஐபிஎல் தொடரிலும் வெளிப்படுத்தி மிரட்டினார்.
யாரு படம் ஓடினாலும் அங்கேயும் தோனிதான் ஹீரோ பாஸு! - தல தோனி
12ஆவது ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர் என்ற சாதனையை சென்னை அணியின் கேப்டன் தோனி படைத்துள்ளார்.
15 போட்டிகளில், 12 ஆட்டங்களில் மட்டுமே பேட்டிங் செய்த அவர், மூன்று அரைசதங்கள் என 83.20 பேட்டிங் சராசரியை வைத்துக் கொண்டு 416 ரன்களை எடுத்தார். இதன் மூலம், இந்தத் தொடரில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
குறிப்பாக, இந்த சீசனில் அவர் தனிஒருவராக ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் 84 ரன்களை விளாசியதுதான் தோனியின் ஸ்பெஷல் இன்னிங்ஸ் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். கோலி, வார்னர், ரஸல், கெயில், டி வில்லியர்ஸ் இந்தத் தொடரில் சிறப்பாக ஆடினாலும், பேட்டிங்கில் ஆவரேஜ் என்று வந்துவிட்டால் அதில் தோனியை அசைக்க முடியாது என்பது என்பது நிரூபணமாகியுள்ளது.