இந்தியாவில் கிரிக்கெட் திருவிழா என கொண்டாடப்படும், 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், ஐபிஎல் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் டி காக், ஐந்தாவது ஓவரில் ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் தந்து நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து, ரோகித் ஷர்மாவும், தீபக் சாஹரின் நக்கல் பந்தில் தோனியிடம் கேட்ச் தந்து பெவிலியன் திரும்பினார்.