விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் திருக்குமரனுக்கும் மதுரை சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகள் மகாலட்சுமிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு, தீபக் என்ற ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது.
திருக்குமரன் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிசிடிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் நிலையில் அருடைய மனைவி மகாலட்சுமி மற்றும் ஒரு வயது குழந்தை தீபக் உடன் அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டி நாகப்பன் செட்டியார் தெருவில் தனது மாமனார் முருகேசன் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஜூலை23) முருகேசன் காலை வெளியே சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பிய நிலையில் வீட்டில் மருமகள் மகாலட்சுமியை காணாமல் தேடியுள்ளார்.
அப்போது மாடியில் சென்று பார்த்த போது மேலே உள்ள அறையில் மகாலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். முருகேசனின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருப்புக்கோட்டை நகர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தை தீபக்கை காணாமல் தேடிய போது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து குழந்தை தீபக் சடலமாக மீட்கப்பட்டார்.
இருவரின் சடலத்தையும் கைப்பற்றிய காவல்துறையினர் உடல் கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:பொதுமக்களை விரட்டும் விஷவண்டு: தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழப்பு!