தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'சாதிய வன்மத்தைக் கக்கும் வினா' - சிபிஎஸ்இ ஆன்லைன் தேர்வு கேள்விக்கு இயக்குநர் நவீன் கண்டனம்!

சென்னை : சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு ஆன்லைன் வினாத்தாளில் பட்டியலின சாதிகள் தொடர்பாக இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கேள்விக்கு மூடர் கூடம் திரைப்பட இயக்குநர் நவீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By

Published : Jul 17, 2020, 4:39 AM IST

சாதிய வன்மத்தை கக்கும் வினா - சிபிஎஸ்இ ஆன்லைன் கேள்விக்கு இயக்குநர் நவீன் கண்டனம்!
சாதிய வன்மத்தை கக்கும் வினா - சிபிஎஸ்இ ஆன்லைன் கேள்விக்கு இயக்குநர் நவீன் கண்டனம்!

சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு ஆன்லைன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியில் பட்டியலின சாதி குறித்து இடம்பெற்ற பகுதி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட 9ஆம் வகுப்பு மாணவர்களுக்காக சமூக அறிவியல் பாடம் மீதான கேள்வியில் பட்டியலின சமூக மக்களை, சாதிய ரீதியாக அவமதிக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

அதில், 'பட்டியலின மக்கள் எந்த வகைப் பொருள்களால் வீடு கட்டுவார்கள்?' என்று கேள்வி எழுப்பி அதற்கு கொள்குறி விடையாக *செங்கல் *காரை *மண் மற்றும் வைக்கோல் என விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற பாடப்பகுதிகள், கேள்விகளுக்கு சமூக இணையதளங்களில் பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இயக்குநர் நவீன், "சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு ஆன்லைன் தேர்வில் கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வி, மாணவர்களின் பிஞ்சு நெங்சங்களில் அவர்களுக்குத் தெரியாமலேயே சாதிய நஞ்சை ஏற்றுவது. சக மனிதர்களுக்கு அநீதி நடக்கும்போது குரல் கொடுக்காமல் அமைதியாய் இருப்பதும் ஒருவகை வன்முறையே. சாதி அமைப்புமுறைக்கு எதிராக நில்லுங்கள். இங்கே பட்டியலின மக்களின் உயிரும், உரிமையும் காக்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

வினாத்தாளில் சாதியப் பாகுபாட்டை விதைக்கும் வகையில் கேள்வியை வடிவமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரவலாக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details