தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குன்னூர் கிராமத்தை சேர்ந்த மகாராஜா என்பவரது மனைவி நிர்மலாதேவி (31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாயா என்பவருக்கும் வீடு கட்டுவதில் நிலப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதற்கு நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணுங்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் தற்கொலை முயற்சி - Theni District Antipatti
தேனி: நிலப் பிரச்னை காரணமாக நீதி வழங்கக்கோரி தாய் - மகள் இருவரும் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
![ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் தற்கொலை முயற்சி ஆட்சியர் அலுவலகத்தில் அம்மா – மகள் தற்கொலை முயற்சி.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:48-tn-tni-01-land-issue-mother-daughter-sucide-attempt-script-7204333-02062020163846-0206f-1591096126-334.jpeg)
மேலும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் வரையில் வீடு கட்ட வேண்டாம் என மாயாவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட மாயா என்பவர் மீண்டும் வீடு கட்டும் பணியை துவக்கியதால் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நிர்மலா தேவி, அவரது தாய் பன்னீர் செல்வி (65) இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றி இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தேனி நகர் காவல்நிலையத்தில் இருவரிடமும் விசாரணை செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் அம்மா – மகள் இருவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.