ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் புலிகள் காப்பகம் காராட்சிக்கொரை சோதனைச் சாவடி வளாகத்தில் ரூ. 7 கோடி செலவில் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், வாழ்வியல் முறை குறித்த மாதிரி கிராமம் அமைக்கப்படுகிறது.
இந்த மாதிரி கிராமத்தில் பழங்குடியினர் இயற்கையாக கிடைக்கும் கோரை புற்கள், மரம், செடிகொடிகளைக் கொண்டு குடில்கள் அமைத்து பழங்குடி மக்கள் வாழும் முறை பண்பாடு, இறைவழிபாடு, ஊருக்கு ஒரு கோயில், உணவு பழக்கவழக்கங்கள் என இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த முறைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன.
இது தவிர வனவிலங்குகள் சிலைகள், பழங்குடி மக்களின் இயல்பான சிலைகள், இசைக்கருவிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நீச்சல் குளங்கள், புலியின் கால் தடம் போன்ற இளைப்பாறும் இடங்கள் செடிகொடிகள் சூழப்பட்ட இளைப்பாறும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளனது. இந்த அருங்காட்சியத்தில் பல்வேறு வகையான பூக்கள், செடிகள் வளர்க்கப்படுகின்றன.