தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

எட்டுவழி சாலைக்கு தமிழ்நாடு அரசு துணை போகக்கூடாது- மக்கள் நீதி மய்யம் - சென்னை- சேலம் எட்டு வழிச் சாலை திட்டம்

சென்னை: சென்னை- சேலம் எட்டுவழி சாலை திட்டத்துக்கு எதிரான வழக்கை விரைந்து முடிக்க மத்திய அரசு முயல்வதை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

எட்டு வழிச்சாலை திட்டம்: மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு துணை போக்கக்கூடாது- மக்கள் நீதி மய்யம்
எட்டு வழிச்சாலை திட்டம்: மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு துணை போக்கக்கூடாது- மக்கள் நீதி மய்யம்

By

Published : Jun 12, 2020, 12:13 AM IST

இது தொடர்பாக அக்கட்சியின் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்” கடந்த மக்களவை தேர்தலின்போது, சென்னை- சேலம் எட்டுவழி சாலை திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது இந்த திட்டத்தை மத்திய அரசு மீண்டும் கையில் எடுக்கும்போது மௌனம் காப்பது ஏன்?

இத்திட்டம் தொடர்பான வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து பதிலளிக்காத மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்திருந்தது. கடந்த ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலைகள் ஆணையம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தது.

ஓராண்டாக வழக்கு விசாரணையை இழுத்தடித்த மத்திய அரசு, தற்போது கரோனா பாதிப்புக்கு மத்தியில் எட்டுவழி சாலை திட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்ற நினைக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு தடுக்காதது மக்களை அவமதிக்கும் செயல்.

கரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் சூழலை மத்திய அரசு சாதகமாக பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு துணை போகக்கூடாது. தானும் ஒரு விவசாயி என கூறும் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு எதிரான இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details