கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்துள்ள மூங்கில் பாடி கிராமத்தில் 10 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக துணை மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் புதிய துணை மின் நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ - கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி : மூங்கில் பாடி கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை, சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.
![கள்ளக்குறிச்சியில் புதிய துணை மின் நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ கள்ளக்குறிச்சியில் புதிய துணை மின் நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:23:30:1600509210-tn-klk-01-kallakurichi-mla-prabhu-tn10026-19092020133038-1909f-1600502438-878.jpg)
கள்ளக்குறிச்சியில் புதிய துணை மின் நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
இதனை சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு திறந்து வைத்தார். அப்போது அவருடன் மேற்பார்வை பொறியாளர் அருள்பெருஜோதி, செயற்பொறியாளர் கணேசன், ஒன்றியச் செயலர், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
இந்தத் துணை மின் நிலையம் மூலம் தகரை, கல்லநத்தம் ,மேல்நாரியப்பனூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள் என பிரபு தெரிவித்தார்.