தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குடிமராமத்து பணிகளை நேரில் ஆய்வு அதிமுக எம்.எல்.ஏ.! - முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம்

திருவண்ணாமலை: ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை, கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

 குடிமராமத்து பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர்!
குடிமராமத்து பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர்!

By

Published : Jun 13, 2020, 4:37 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையத்தையடுத்த காரப்பட்டு கிராமத்தில் பெரிய ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரியினை சீரமைக்க ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

ஏரியில் நடைபெறும் குடிமராமத்து பணி மூலம் இரண்டு மதகுகள் சீரமைக்கும் பணிகள், ஏரிக் கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இந்தப் பணிகளை கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ., வி.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை'

ABOUT THE AUTHOR

...view details