திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பிள்ளையார்கோவில்பட்டி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுமார் 6 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு கட்டடத்தை, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் திறந்து வைத்து மக்களுக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்களை வழங்கினார்.
இதேபோல் கருப்பூர் ஊராட்சிக்குள்பட்ட வடக்கிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து கட்டப்பட்ட சுமார் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான நியாயவிலை கட்டடத்தை திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.