கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பிரசித்திப்பெற்ற தாணுமாலய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள ரத வீதியில் மேலே சென்ற மின்கம்பிகளை அகற்றிவிட்டு, பூமிக்கு அடியில் பதித்துக் கொண்டுச் செல்லும் பணி, சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வந்தது.
தற்போது 80 விழுக்காடுப் பணிகள் முடிவடைந்த நிலையில், ரத வீதியிலிருந்து சிறு தெருக்களில் அமைந்துள்ள வீடுகளுக்குக் கொண்டு செல்லும் மின்கம்பிகளை பூமிக்கடியில் கொண்டு செல்லாமல், நடைபாதைக்குமேல் போட்டுள்ளனர்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆண்டிற்கு இரு தேர்த்திருவிழா, ஆஞ்சநேயர் ஜெயந்தி போன்ற விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
எனவே, இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி, இதனை பூமிக்கடியில் கொண்டு செல்லுமாறு, அப்பகுதி மக்கள் சம்பந்தபட்ட அலுவலர்களிடம் தெரிவித்துள்ளனர்.