தமிழ்நாட்டில் மேல்நிலை வகுப்புகளுக்கு நடைமுறையிலிருந்த நான்கு பாடத்திட்ட முறையை மாற்றி மூன்று பாடத்திட்ட முறையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களின் கல்வி உரிமையையும், வேலைவாய்ப்பிற்குச் செல்லும் வாய்ப்பையும் பாதிக்கும் என்று பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன.
'சரியான ‘வாபஸ்’ பழனிசாமி' - பழைய பாடத்திட்ட அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு - தமிழ்நாடு அரசு அரசாணை
சென்னை: மேல்நிலை வகுப்புகளுக்குப் (11,12ஆம் வகுப்பு) பழைய பாடத்திட்ட நடைமுறையே தொடரும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இந்நிலையில், மேல்நிலை வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டு முதல், முன்பு இருந்த நான்கு பாடத்திட்ட முறையே தொடரும் என்று அறிவித்தது. புதிய பாடத்திட்ட முறை ரத்துசெய்யப்பட்டது.
மாநில அரசின் இந்த அறிவிப்பை வரவேற்று, திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “குளறுபடியான புதிய பாடத் தொகுப்பை ரத்துசெய்ய வேண்டும் என நான் கோரியிருந்தேன். இப்போதாவது அதனை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டுப் பின்னர் திரும்பப் பெறுவது இந்த அரசின் வழக்கமாகிவிட்டது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் இத்தனை அலட்சியமா? சரியான ‘வாபஸ்’ பழனிசாமி” எனக் குறிப்பிட்டுள்ளார்.