தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் கூட்டம் !

சென்னை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(ஜூலை 16) நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் கூட்டம் !
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் கூட்டம் !

By

Published : Jul 16, 2020, 11:26 PM IST

காணொலி வாயிலாக இன்று நடைபெற்ற இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில், மத்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம் வருமாறு:

  • கரோனா நோய்த் தொற்று தீவிரமாகப் பரவிவருவதைத் தடுக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிடவும் உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
  • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய தொகுப்பின் கீழ் மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
  • நகர்ப்புற, ஏழை - எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து வரும் நீட் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்த அவசரச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
  • தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலையில் விரைந்து நீதி கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.
  • விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
  • தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் செல்ல அனுமதிக்கக்கூடாது.
  • கரோனாவின் உச்சகட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் அனைத்து செமஸ்டர்களையும் ரத்து செய்ய வேண்டும்.
  • தி.மு.க. வெற்றிபெற்ற உள்ளாட்சி அமைப்புகளைப் புறக்கணிப்பதை அ.தி.மு.க. அரசு கைவிட வேண்டும்.
  • திருப்போரூர் கழக எம்.எல்.ஏ. இதயவர்மன் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்கின் உண்மை வெளிவர புலனாய்வை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
  • ஊரடங்கு காலத்தில் மின்கட்டணத்தை குறைக்காமல், உயர்த்தும் தமிழ்நாடு அரசைக் கண்டிக்கிறோம்.

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் மின்கட்டணத்தைக் கண்டித்து வரும் ஜூலை21ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கு முன் கறுப்புக்கொடி ஏற்றி கண்டன முழக்கங்கள் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details