தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திருவள்ளூரில் ரூ 8.24 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள் - மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.8.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் தொடங்கி வைத்தனர்.

திருவள்ளூரில் ரூ.8.24 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்
திருவள்ளூரில் ரூ.8.24 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

By

Published : Jul 22, 2020, 5:34 PM IST

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் இருவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அதில்121 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.6.82 கோடி மதிப்பில் 275 மின்கலத்தால் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனங்கள். ரூ. 80 லட்சம் மதிப்பிலான வேளாண்மை எந்திரம். 38 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் என மொத்தம் ரூ.8.24 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் குப்பைகளை அப்புறப்படுத்த மின்கலத்தால் இயங்கக்கூடிய 275 மூன்று சக்கர வாகனங்கள் ரூ. 682 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details