இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்”, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காக தொலைநோக்கு பார்வையுடன் எண்ணற்ற நலத்திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் முன்னேற்றதில் தனி கவனம் செலுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது- அமைச்சர் விஜயபாஸ்கர் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை: மாவட்டத்தில் 61 ஆயிரத்து 815 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,702 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும், மகளிர் திட்டத்தின் மூலம் 61 ஆயிரத்து 815 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் சுழற்சி முறையில் பல்வேறு தொழில்களுக்கென வங்கி கடனுதவியாக ரூ.1, 702 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- அதே போன்று சமூக முதலீட்டு நிதி திட்டத்தின் கீழ் 328 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.14.76 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
- அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஐந்தாயிரத்து 439 இருசக்கர வாகனங்கள் ரூ.13.59 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
- ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதர இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி ரூ.7.88 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளி மற்றும் நலிந்தோர் பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் 328 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் பாதுகாப்பு நிதி ரூ.4.52 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் வங்கி கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் நான்காயிரத்து 387 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழற்சி முறையில் வங்கி கடனுதவியாக ரூ.139.88 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி ரூ.4.17 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
பெண்களின் முன்னேற்றமே அந்த சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதை நன்கு உணர்ந்த தமிழ்நாடு அரசு இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திவருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் திட்டங்களை மகளிர் உரிய முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்” என்றார்.