தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம்: அமைச்சர் விஜயபாஸ்கர்! - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து விரைவில் சட்ட திருத்தம் செய்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Minister Vijayabaskar Press Meet In Chennai
Minister Vijayabaskar Press Meet In Chennai

By

Published : Sep 3, 2020, 6:21 AM IST

சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் 108 கட்டுப்பாட்டு மையத்தினை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். இந்தியாவிலேயே 108 அவசரகால வாகனச் சேவை பணியில் பணியமர்த்தப்பட்டுள்ள முதல் பெண் ஓட்டுநர் வீரலட்சுமியை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், "கரோனா பிப்ரவரி மாதத்திலேயே விமான நிலையத்தில் வந்தது முதல் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.

இயற்கை பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். கரோனா தொற்று பேரிடர் காலத்திலும் மிகச் சிறப்பாக பணிபுரிந்து வந்துள்ளனர். சென்னை மழை வெள்ளம், தீ விபத்து போன்ற காலங்களிலும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். 108 ஆம்புலன்ஸில் பணிபுரிபவர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

கரோனா காலத்தில் ஐநூறு ஆம்புலன்ஸ்கள் மேலும் புதிதாக வாங்கப்பட்டு சேவையில் ஈடுபட்டுள்ளது. 2 லட்சம் கரோனா நோயாளிகளையும் அழைத்து வந்துள்ளோம். மேலும் இந்தியாவில் முதல் முறையாக 108 ஆம்புலன்சில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்துள்ள வீரலட்சுமியை பாராட்டுகிறேன்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில், "கரோனா தொற்று பேரிடர் காலத்தில் முழு 108 ஆம்புலன்ஸ் சேவை மகத்தானது. 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்ட 2 லட்சத்து 15 ஆயிரத்து 915 நோயாளிகளைக் இதுவரை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளனர்.

கரோனா தொற்று காலத்தில் மாரடைப்பு, விபத்து ,மகப்பேறு உள்ளிட்ட எந்த சேவைகளும் பாதிக்காத வகையில்ஸ இந்தக் காலத்திலும் 5 லட்சம் பேர் 108 சேவையை பயன்படுத்தி உள்ளனர். முதலமைச்சர் 108 சேவையை வலுப்படுத்துவதற்காக ஏற்கனவே ஆயிரத்து 5 ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

தற்போது கூடுதலாக 500 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 118 ஆம்புலன்ஸ்கள் மக்களின் சேவைக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற ஆம்புலன்ஸ்களும் படிப்படியாக மக்களின் சேவைக்கு அளிக்கப்படும். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் உயிர்காக்கும் பொன்னான நேரத்தை 8 நிமிடம் 3 வினாடியாக தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறோம்.

இக்காலகட்டத்தில் பொது மக்கள் முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அரசின் வழிமுறைகளை கூடுதல் கவனமாக பின்பற்றினால் தொற்றைத் தவிர்க்க முடியும். கரோனா வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து அவசர சட்டம் கொண்டு வருவதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் வந்ததா என கேட்டதற்கு, முதலமைச்சர் எல்லா விஷயத்திலும் தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் சட்டப் போராட்டத்தை நடத்தியும், அரசியல் அழுத்தத்தை கொடுத்து வருகிறார். முதுகலை மருத்துவப் படிப்பில் உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் மிகச் சிறப்பாக வாதாடி தமிழ்நாடு அரசின் உரிமையை நிலைநாட்டும் வெற்றிகரமான பணியை செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசிற்கு சாதகமான தீர்ப்பைப் பெற்று உள்ளோம். அதே போன்று எல்லா விஷயத்திலும் தமிழ்நாட்டின் உரிமையைக் காக்க தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து முதலமைச்சர் எடுத்து வருகிறார்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details