தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 3, 2020, 7:38 PM IST

ETV Bharat / briefs

கோவை மாவட்டம் கட்டுக்குள் உள்ளது - அமைச்சர் வேலுமணி

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது என தெரிவித்தார்.

Press meet
Press meet

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், கோவையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடிசியா உட்பட பல இடங்களில் 4,655 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்துபட்டுள்ளது.

மாவட்ட எல்லைகளில் தொடர் சோதனைகள் நடத்தபட்டு வருகிறது. கரோனா தொற்று அறிகுறி இருக்கிறதா என்பதை கண்டறிய 5,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. கோவையில் கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது.

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் அளவிற்கு கோவை மாவட்டம் இல்லை. அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். கடைகள், வணிக நிறுவனங்களில் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும். சித்தா மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி கூடும் என்பதால் சித்த மருத்துவ கிட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி தவிர பிற பொருட்களுக்கு பணம் வாங்கப்படுவது குறித்து மாநில அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இதுகுறித்து உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details