தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அமைச்சர் தங்கமணிக்கு, தொற்று எப்படி கண்டறியப்பட்டது? - அமைச்சர் தங்கமணி கலந்து கொள்ளவில்லை.

சென்னை :மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவருகிறார்.

அமைச்சர் தங்கமணிக்கு, தொற்று எப்படி கண்டறியப்பட்டது?
அமைச்சர் தங்கமணிக்கு, தொற்று எப்படி கண்டறியப்பட்டது?

By

Published : Jul 9, 2020, 2:40 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில், மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் சென்னை வருவதால் அவருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ள அனைவருக்கும் நேற்று முன்தினம் (ஜூலை7) கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அந்தப் பரிசோதனை முடிவில் அமைச்சர் தங்கமணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் முதலமைச்சர், மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் சந்திப்பில் அமைச்சர் தங்கமணி கலந்து கொள்ளவில்லை.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் தங்கமணி, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இதையும் படிங்க: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்ட கணவர்: உடலை மீட்டு தரக்கோரி மனைவி மனு!

ABOUT THE AUTHOR

...view details