கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டார்.
அம்மா உணவகத்திற்கு ரூ.87 லட்சம்: எஸ்.பி. வேலுமணி வழங்கல் - கோவை மாவட்ட அண்மைச் செய்திகள்
கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை அம்மா உணவகத்திற்கு வழங்கினார்.
எஸ்.பி. வேலுமணி
ஆய்வுக் கூட்டம் முடிந்தவுடன் அதிமுக கட்சியின் சார்பில் 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை அம்மா உணவகத்தின் மேம்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.
இந்நிகழ்வின்போது மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார், மாநகராட்சி காவல் ஆணையர் சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.