தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அமைச்சர் செங்கோட்டைனை எதிர்த்துப் போட்டியிடுவேன் என அவரது அண்ணன் மகன் உறுதி - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: அமைச்சர் செங்கோட்டைனை எதிர்த்து தான் போட்டியிடப்போவதாக அவரது அண்ணன் மகன் செல்வம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டைனை எதிர்த்து பேட்டியிருவேன் என அவரின் அண்ணன் மகன் உறுதி
அமைச்சர் செங்கோட்டைனை எதிர்த்து பேட்டியிருவேன் என அவரின் அண்ணன் மகன் உறுதி

By

Published : Sep 20, 2020, 7:00 AM IST

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதையறிந்த திமுக நிர்வாகிகள் குள்ளம்பாளைத்தில் உள்ள செல்வத்தின் வீட்டில் அவரைச் சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதனைத் தொடாந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்வம், "அதிமுகவின் செயல்பாடுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுபடுத்தியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் திமுக அலை வீசுகிறது.

அதிமுகவினர் அலை அலையாக திமுகவில் இணைந்து வருகின்றனர். கோபிச்செட்டிப்பாளையத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திமுவில் இணையும் நிகழ்வு விரைவில் நடைபெறும்.

மேலும், திமுக தலைவரும் கட்சியும் அனுமதித்தால் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்துப் போட்டியிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details