ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த பெரிய கொடிவேரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டின் கல்வியில் புரட்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் தொடங்குவதற்கு முன்பு அதைப் பற்றி கருத்துக் கூறினால் அதில் எந்த பயனும் இருக்காது.
ஆன்லைன் பயிற்சிக்கு மூன்று தொலைக்காட்சிகள் தயாராக உள்ளன. இன்னும் இரண்டு தொலைக்காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. பயிற்சி தொடங்கப்பட்ட உடன் கருத்துகள் தெரிவிக்கலாம். அதில், உள்ள சில குறைபாடுகளை களைந்து நன்றாக செயல்படுத்த முடியும்.