நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது - அமைச்சர் சரோஜா! - நாமக்கல்லில் அமைச்சர் சரோஜா பேச்சு
நாமக்கல்: அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துவருவதாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
பின்னர் கூட்டத்தில் அமைச்சர் சரோஜா பேசுகையில், "கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மையாக விளங்கிவருகிறது. அங்கன்வாடி, பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்களுடன் முட்டைகளும் வழங்கப்படும்.
தற்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் மேலும் சேர்க்கை அதிகரிக்கும். ஆசிரியர்கள் கரோனா தொற்று குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தன்னையும் தன்னைச் சேர்ந்துள்ளவர்களையும் பாதுகாத்திட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.