கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட சின்னதாராபுரம் பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் வாய்க்கால் தூர்வாருதல், தடுப்புச்சுவர் கட்டும் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் தொடக்கி வைத்தார்.
பின்னர் இது குறித்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில், "அமராவதி ஆறு கரூர் மாவட்டத்தில் 78 கி.மீ தூரம் பயணிக்கிறது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தில் சின்னதாராபுரம், நஞ்சைகாளகுறிச்சி, அணைப்பாளையம் ஆகிய கிராமங்களில் அமராவதி ஆற்றின் குறுக்கே மூன்று பழைய அணைக்கட்டுகளும், செட்டிபாளையம் அணைக்கட்டு என மொத்தம் நான்கு அணைக்கட்டுகளில் மூலம் பிரிந்து நான்கு பழைய பாசன வாய்க்கால்கள் மூலம் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 175 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.