தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'தீக்குளித்து உயிரிழந்த இளைஞர்; மனைவிக்கு அரசு வேலை கிடைக்க பரிந்துரை' - அமைச்சர் கே.சி. வீரமணி உறுதி - வேலூர் தனியார் மருத்துவமனை

திருப்பத்தூர்: ஆம்பூரில் தீக்குளித்து உயிரிழந்த இளைஞரின் மனைவிக்கு அரசு வேலை கிடைக்க பரிந்துரை செய்வதாக அமைச்சர் கே.சி.வீரமணி உறுதியளித்துள்ளார்.

தீக்குளித்து உயிரிழந்தவரின் மனைவிக்கு அரசு வேலை கிடைக்க பரிந்துரை- அமைச்சர் கே.சி.வீரமணி
தீக்குளித்து உயிரிழந்தவரின் மனைவிக்கு அரசு வேலை கிடைக்க பரிந்துரை- அமைச்சர் கே.சி.வீரமணி

By

Published : Jul 21, 2020, 6:32 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஓ.ஏ.ஆர். திரையரங்கம் அருகில் கடந்த 12ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அவ்வழியாக வந்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவரின் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். இதனால், விரக்தியடைந்த முகிலன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார்.

சம்பவ இடத்தில் முகிலனின் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த காவலர் சந்திரசேகர் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், முகிலன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவருடைய உடல் தனியார் மருத்துவமனையிலிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, முகிலனின் வீட்டிற்கு நேரில் சென்று அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் தீக்குளித்து உயிரிழந்த இளைஞரின் மனைவி லீலாவதி 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளதால், அதற்கு ஏற்றார்போல் அரசு வேலை வழங்க பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். மேலும் அவருடைய குழந்தைகளுக்கு தேவையான கல்வி உதவிகளை செய்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details