அதிமுக அமைப்புச் செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான டி.ஜெயக்குமார் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், " அதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் ஏதும் ஏற்படவில்லை.
அதிமுக கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் ஏதும் ஏற்படவில்லை, ஒற்றுமையாக இருந்து மகத்தான வெற்றிபெற வேண்டுமென்ற அடிப்படையில்தான் விவாதம் இருந்தது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கட்சியும், ஆட்சியும் எவ்வளவோ சதி, எதிர்ப்புகளுக்கிடையே கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பெரிய வெற்றியை பெறும் வகையில், ஒற்றுமையாக இருந்து மகத்தான வெற்றிபெற வேண்டுமென்ற அடிப்படையில்தான் விவாதம் இருந்தது " என்றார்.
முதலமைச்சர் வேட்பாளர் குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, ஏற்கனவே அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதால் அந்த விவாதமே எழவில்லை என்ற கூறிய அவர், கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி கூட்டப்படுகிறது எனத் தெரிவித்தார்.