நாட்டில் நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வெளி மாநிலத் தொழிலாளர்கள் வேலை இழந்து பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் உதவியுடன் சிறப்புப் பேருந்துகள் மூலமோ, ரயில்கள் மூலமோ வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்களது மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், கோவையிலிருந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இரண்டு சிறப்புப் பேருந்துகள் மூலம் திரிபுராவைச் சேர்ந்த 55 பேர் அவர்களது மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.