குஜராத் மாநிலம் சூரத்தில் வேலைபார்த்துவந்த குடிபெயர்ந்த தொழிலாளியான மணி சங்கர் என்பவர், ஊரடங்கின் காரணமாக தனது சொந்த ஊரான அம்லோஹாராவிற்குத் திரும்பினார். இந்நிலையில், இன்று திடீரென்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர், அவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.