தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கால்பந்து - பார்சிலோனா படுதோல்வி - மெஸ்ஸி

லா லிகா கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 0-2 என்ற கோல் கணக்கில் செல்டா டி  விகோ அணியிடம் தோல்வி அடைந்தது

கால்பந்து - பார்சிலோனா படுதோல்வி

By

Published : May 5, 2019, 9:03 PM IST

ஸ்பெயின் நாட்டில் லா லிகா கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, செல்டா டி விகோ அணியுடன் மோதியது.

இந்த ஆண்டுக்கான லா லிகா கால்பந்து தொடரையும் பார்சிலோனா அணி வென்றதால், அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி, நட்சத்திர வீரர்களான சுவாரஸ், புஸ்கட்ஸ், ரகிடிச் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

இதனால், பார்சிலோனா அணியில் முற்றிலும் இளம் வீரர்களே அதிகமாக இடம்பெற்று இருந்தனர். இதையடுத்து, 67ஆவது நிமிடத்தில், செல்டா டி விகோ வீரர் மேக்ஸிமிலியானா (Maximilliano) கோல் அடித்தார். இதைத்தொடர்ந்து, 88ஆவது நிமிடத்தில் செல்டா டி விகோ அணிக்கு பெனால்டி கிடைத்தது.

இதை, அந்த அணியின் வீரர் அஸ்பாஸ் (Aspas) லாவகமாக பயன்படுத்தி கோலாக மாற்றினார். பார்சிலோனா இறுதி நிமிடம் வரை போராடியும் கோல் அடிக்க முடியாமல் போனது. இறுதியில், பார்சிலோனா அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

ABOUT THE AUTHOR

...view details