திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது 265ஆக உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் மாற்றுத்திறனாளிகள் கூட்டமாக நின்று மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாகினர்.