தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தருமபுரியில் வெறிச்சோடிய இறைச்சிக் கடைகள் ! - தருமபுரி பொது முடக்கம்

தருமபுரி: பொதுமுடக்கம் முடிந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் இன்றி நேற்று கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Meat Shops Opening in Dharmapuri
Meat Shops Opening in Dharmapuri

By

Published : Sep 7, 2020, 10:30 AM IST

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளன.

இதனிடையே, கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டுவந்தன. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், தளர்வில்லா முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சிக் கடைகள் இரண்டு மாதங்களாகத் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், செப்டம்பர் மாதம்‌ முதல் பொதுமுடக்கத்தில் அதிக தளர்வுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு தருமபுரி மாவட்டத்தில் இறைச்சி, மீன் கடைகள் திறக்கப்பட்டன.

அரூர் பகுதியில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று இறைச்சி, மீன் கடைகள் திறக்கப்பட்டும், பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details