தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நகராட்சி ஊழியருக்கு கரோனா உறுதி: அலுவலகம் 3 நாள்களுக்கு மூடல்! - மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம்

நாகை: மயிலாடுதுறை நகராட்சி ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நகராட்சி அலுவலகம் மூன்று நாள்களுக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mayiladurai Municipality Office Closed
Mayiladurai Municipality Office Closed

By

Published : Aug 31, 2020, 6:36 PM IST

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் தட்டச்சராகப் பணிபுரிந்து வரும் பிரபாகர் என்பவருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, நகராட்சி அலுவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் உடனடியாக நகராட்சி அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், மூன்று நாள்கள் நகராட்சி அலுவலகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் அண்ணாமலை தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details