தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மாயனூர் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு! - Karur district news

கரூர்: மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடும் தண்ணீரால் காவிரி ஆற்றில் மாயனூர் கதவணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கரூர் காவிரி ஆற்றில் மாயனூர் கதவணை நீர் வரத்து அதிகரிப்
கரூர் காவிரி ஆற்றில் மாயனூர் கதவணை நீர் வரத்து அதிகரிப்

By

Published : Jul 5, 2020, 8:35 AM IST

கரூர் மாவட்டத்தில் 1.5 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடிய, காவிரி ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள மாயனூர் கதவணையில், கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடும் தண்ணீரால் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அந்த கதவணையில் உள்ள 98 மதகுகளும் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

மாயனூர் கதவணைக்கு நாளொன்றுக்கு மேட்டூர் அணையிலிருந்து 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தடைகிறது. இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயனடையும் வகையில், தவணையில் மேல்புறம் உள்ள தென்கரை வாய்க்காலில் 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு முக்கொம்பு வழியாக கல்லணைக்கு அனுப்பப்படும் நீர் 13 ஆயிரம் கனஅடியாக மாயனூர் கதவணையிலிருந்து நாளொன்றுக்கு திறக்கப்படுகிறது. இதன்மூலம் டெல்டா பாசன விவசாயிகள் பயன்பெறுகின்றனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details