விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத்(36) என்பவருக்குச் சொந்தமாக தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சிகள் தயாரிக்கும் பணி வழக்கம்போல் நடைபெற்று வந்தது.
தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து: ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம் - Match Box Industry Fire Accident In Virudhunagar
விருதுநகர்: தீப்பெட்டி தொழிற்சாலையில் உராய்வின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.
Match Box Industry Fire Accident In Virudhunagar
அப்போது, எதிர்பாராத விதமாக உராய்வின் காரணமாக தீக்குச்சியில் தீப்பற்றி இயந்திரம் முழுவதும் எரிந்து நாசமாயின. இதையடுத்து, தகவலறிந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.