கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று (செப்டம்பர் 16) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கரூரில் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கரூர்: கரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூரில் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அப்போது, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்கு சட்டப்பேரவையில் அறிவித்த படி, ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு நிர்ணயித்த சம்பளம் 4000 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும், கரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும், ஊரக வளர்ச்சித் துறையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களை காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.