தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குமரியில் மா.கம்யூ., கட்சியினர் டெல்லி காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது பொய் வழக்கு பதிந்துள்ள டெல்லி காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் டெல்லி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் டெல்லி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 16, 2020, 2:52 PM IST

கிழக்கு டெல்லி பகுதியில் சென்ற பிப்ரவரி மாதம் ஷாஹின்பாக் போராட்டக்காரர்கள் மீது பாஜக நடத்திய தாக்குதலை கண்டித்ததற்காக, சிபிஎம் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது டெல்லி காவல் துறை வழக்குப் பதிந்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்லி காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்ல சுவாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், டெல்லி காவல் துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details