மும்பை:இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சிறிய அளவு குறைந்து முடித்துள்ளது. சென்செக்ஸ் இடைநேர வர்த்தகத்தில் 212 புள்ளிகள் உயர்த்தும், பின்பு 369 புள்ளி சரிந்தும் காணப்பட்டது.
பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி; டீசல் விலை ரூ.80ஐ கடந்தது - பங்கு சந்தை நிலவரம்
சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை நிலையற்ற தன்மையுடன் இன்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. மேலும் டீசல் விலை 80 ரூபாயைக் கடந்தது.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 27 புள்ளிகள் குறைந்து 34,842 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 16 புள்ளிகள் குறைந்து 10,289 புள்ளிகளில் நிறைவுபெற்றது. மேலும், டெல்லி நுகர்வோர் சந்தை நிலவரப்படி டீசலின் விலை 80 ரூபாயைக் கடந்து, இந்த மாதத்தில் புதிய உச்சத்தைத் தொட்டு வர்த்தகமானது.