2019ஆம் ஆண்டுக்கான மாட்ரிட் ஓபன், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறவிருந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரும், செர்பிய வீரருமான நோவாக் ஜோகோவிச், குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொள்ள இருந்தார்.
டென்னிஸ்: ஆடாமலே அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச் - ஜோகோவிச்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் உடல் நலக்குறைவு காரணமாக குரோஷிய வீரர் மரின் சிலிச் விளையாடததால், ஜோகோவிச் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, மரின் சிலிச் உடல் நலக்குறைவு காரணமாக இப்போட்டியில் பங்கேற்கபோவதில்லை என அறவித்தித்தார். இதனால், ஜோகோவிச் போட்டியில் விளையாடாமலே அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
"நேற்று இரவு நான் சாப்பிட்ட உணவு, எனக்கு ஒத்துக்காததால், இன்றைய போட்டியில் என்னால் பங்கேற்க முடியாமல் போனது" என மரின் சிலிச் ட்வீட் செய்தார். இதனால் அரையிறுதிப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஜோகோவிச் நாளை நடைபெறும் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டாமினிக் தியம்மை சந்திக்க உள்ளார்.