தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

விஜயமங்கலத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை! - Tiruppur Suicide News

திருப்பூர்: விஜயமங்கலத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

By

Published : Aug 11, 2020, 11:06 AM IST

Updated : Aug 11, 2020, 11:36 AM IST

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மேட்டுக்கடை அருகேயுள்ள செல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன்.

கூலித் தொழிலாளியான சாமிநாதனின் இரண்டாவது மனைவி மேரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து இவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் இவரை விட்டு விலகி ஈரோட்டிலுள்ள பாட்டி வீட்டிற்குச் சென்று விட்டனர்.

இதனிடையே, மனைவி இறந்து போனதற்கு பிறகு தனக்கு ஆதரவில்லையே என்று மதுவிற்கு அடிமையான சாமிநாதன் தனது முதல் மனைவியின் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனால், முதல் மனைவியின் மகன் எந்த வேலைக்கும் செல்லாமல் சாமிநாதனிடம் பணத்தைப் பெற்று ஆடம்பரமாக செலவு செய்தபடியிருந்துள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்குள்ளான சாமிநாதன் நேற்று முன்தினம்(ஆக.9) மதியம் விஜயமங்கலம் அருகே புலவர்பாளையத்திலுள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில், புலவர்பாளையம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் சாமிநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பெருந்துறை காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Last Updated : Aug 11, 2020, 11:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details