தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பொள்ளாச்சி பாணியில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது!

திருப்பூர்: பொள்ளாச்சி பாணியில் வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்தவரை காவல் துறையினர் கைது செய்து வீடியோ ஆதாரங்களை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Man arrested for raping woman In Tiruppur
Man arrested for raping woman In Tiruppur

By

Published : Jul 10, 2020, 7:11 PM IST

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் மாது (41). இவர் கடந்த சில வருடங்களாக திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் தனது மனைவி, 6 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

அதே பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வரும் மாது அங்கு வேலை செய்து வரும் 24 வயது இளம்பெண் ஒருவரை காதலிப்பதாக நாடகமாடி அந்தப் பெண் தனியாக இருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ, போட்டோ எடுத்து வைத்து மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

தற்போது ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மாது சொந்த ஊரான சென்னிமலைக்கு குடும்பத்துடன் சென்று விட அந்த 24 வயது பெண் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். ஆனாலும், மாது தொடர்ந்து அந்த பெண்ணை தொந்தரவு செய்து வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணிற்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அதையறிந்த மாது அந்த மாப்பிள்ளைக்கு அந்த பெண்ணின் வீடியோ, போட்டோவை அனுப்பிவைத்துள்ளார்.

மேலும் ஒரு படி மேலே சென்று அந்த பெண்ணின் போட்டோ, வீடியோவை சமுக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார்அளித்தார்.

அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மாதுவை கைது செய்து போட்டோ, வீடியோவை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அடைத்துவைத்து 3 மாதம் பாலியல் தொல்லை

ABOUT THE AUTHOR

...view details