தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கடலூரில் காதலியை ஏமாற்றிய காதலன் கைது!

கடலூர்: காதலியை ஏமாற்றி, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த காதலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Man arrested for cheating his girlfriend In Cuddalore
Man arrested for cheating his girlfriend In Cuddalore

By

Published : Jun 25, 2020, 9:47 PM IST

கடலூர் மாவட்டம், கர்ணத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(21). விருத்தாசலம் அருகேயுள்ள சின்னப்பரூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஜோதிகா(20). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், விக்னேஸ்வரன் ஜோதிகாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த ஜோதிகா அதிர்ச்சியடைந்து, இது குறித்து விக்னேஸ்வரனின் வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார்.

அப்போது விக்னேஸ்வரன், அவரது தந்தை ராமு, தாய் மகேஸ்வரி, சகோதரர் முத்துப்பாண்டி ஆகிய நால்வரும் ஜோதிகாவைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக ஜோதிகா, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர், காவல் ஆய்வாளர் கமீலா பானு தலைமையிலான காவலர்கள் நால்வரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க:சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் - நீதிபதி விசாரணை

ABOUT THE AUTHOR

...view details