தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பட்டப்படிப்பை நிறைவு செய்த மலாலா; நெட்ஃபிளிக்ஸில் நேரத்தை செலவிடுகிறாராம்! - மலாலா

நோபல் பரிசு பெற்ற இளம்பெண் மலாலா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ள நிலையில், அடுத்தகட்ட திட்டம் எதுவுமின்றி நெட்ஃபிளிக்ஸில் பொழுதைக் கழித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மலாலா
மலாலா

By

Published : Jun 19, 2020, 6:43 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கல்வி ஆர்வலரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா இன்று (ஜூன் 19) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த 22 வயது மலாலா யூசுப்சையி, பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பரப்புரை செய்ததற்காக 2014ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத் துறையில் மலாலா தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய மலாலா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் இயக்குநர்!

இதன்பொருட்டு தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ள மலாலா, தனது அடுத்தகட்ட திட்டம் என்ன என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நெட்ஃபிளிக்ஸ், வாசிப்பு, தூக்கம் என்று தற்போது பொழுதைக் கழிப்பதாக தெரிவித்துள்ளார்.

பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் மலாலாவை 15 வயதுச் சிறுமியாக இருந்த சமயத்தில் 2012ஆம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details